Monday, January 23, 2012


என்னை வியத்த பறவை
ஒன்று என் முற்றத்தில் நின்று
என்னை பார்த்து கேட்டது.....
இது உன் வீடா என்று...

Thursday, January 5, 2012

இது நாந்தாங்க....


உழுதவன் கணக்கு பாத்தா....
உழக்கு கூட மிஞ்சாதாம்.
அப்படி தான் இருக்கு நம்ம பொழப்பும்....

என்னமோ போங்க....


இந்த வாழ்க்கை சில நேரம் ரொம்ப இனிப்பாவும் , சில நேரம் ரொம்ப கசப்பாவும் இருக்கு. இனிப்பு மட்டுமே இருந்தாலும் கொஞ்சம் திகட்டிடுது.....கசப்பாவே  இருந்தாலும் வெறுத்துடுது. ஒ! இதுதான் வாழ்கை என்பதா?
திரும்ப ஒரு தடவை தலைப்பை மட்டும் படிச்சிக்குங்க....

என்னை கேட்காமலே முத்தமிட்டது.....
இதழோரம் மழை துளி.
- யாரோ.

Sunday, June 20, 2010

ராவணன் - திரை பார்வை.

இன்று ராவணன் திரைபடத்தை பெரம்பலூர் ஸ்ரீ ராம் தியேட்டரில் பார்த்தேன்.
நன்று.
ஆனால் மணி என்ன சொல்ல வர்ரர்ருன்னுதன் தெரியல.

நான் நினைக்கிறேன் மணி படத்தை ஒரு தடவை பார்த்து புரிஞ்சிக்கிரவன் பாக்கியசாலிய இருப்பன்னு....
ஹ்ஹும்....நமக்குதான் அந்த கொடுப்பினை இல்லையோன்னு தோணுது.....

மக்களே....குறைந்த பட்சம் ஒரு தடவை தியேட்டர்ல பாத்துட்டு..... வீட்டுக்கு வரும் பொது மறக்காம...ஒரு DVD வாங்கிட்டு வந்து பாருங்க...அப்பத்தான் படம் புரியும்.....


அன்புடன்....
மணி ரசிகன்.

Wednesday, June 16, 2010

கவிதையும் காற்றும்.

எனை வீசி சென்ற பின்பும்
கலையாத நினைவு
கவிதை படைக்க தூண்டியது.

Friday, May 14, 2010

தாடி

குழி விழுந்த கன்னம்....

முகத்தில் பரு....

காதல் தோல்வி ...

காரணங்கள் பலவாறாக கற்பிக்க பட்டாலும் -

எல்லோரிடமும் சொல்லி கொண்டிருக்க முடியாது

பிளேடுகளின் மீதான வெறுப்பு

அம்மாவின் தாலி

அறுபட்டதில் இருந்து தொடங்கியது என்பதை.